Breaking News
Loading...
Share It

Recent Posts

Recents

AD
AD
Powered by Blogger.
ads

Comments

recentcomments

Subscribe Us

Popular Posts

Random Posts

randomposts

Popular

Friday, October 29, 2021

வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.



தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'கொட்டமடிக்காதே கொடுங்கோல் அரசே, எங்கள் மண் எங்கள் குருதி, திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும், தமிழர் இன்பரம்பலை சூறையாடும் எண்ணத்தை நிறுத்து, எங்கள் தாயகத்தில் எங்களை நிம்மதியாக வாழவிடு, தமிழன் ஒன்றும் 700 பேருடன் நாடு கடத்தப்பட்டவன் அல்ல, சர்வசே தலையீடு உடன் தேவை, இது ஒன்றும் படகில் வந்த குடியேற்றம் அல்ல' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன், ' அனுராதபுரத்தின் எல்லைப்புறத்தில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதை நிறுத்து, நிறுத்து நிறுத்து சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இராணுவமே வெளியேறு, தமிழர் தேசம் வவுனியா வடக்கு, வடக்கும் - கிழக்கும் தமிழர் தாயகம்' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்(Gajendrakumar Ponnambalam) பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 



Sunday, August 15, 2021


🚨#கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில்  இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  
 
கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் சென்று மோட்டார் சைக்கிள்  கொண்டிருந்தபோது (கைதடிப் பக்கமாக - இறைச்சிக்கடைக்கு அண்மையில்)   பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில்  டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதில்  35 வயது மதிக்கத்தக்க  இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கணவர்  மற்றைய பக்கமாக  விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, July 12, 2021

 🚨#Sinopharm  தடுப்பூசியினால் கோவிட் நோய்  ஏற்பட முடியுமா❓❓❓



👉👉எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவருக்கு தடுப்பூசிப் பெற்றுக்கொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்துமா?

 தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா?

ஏன் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Sinopharm  தடுப்பூசி வழங்கப்படவில்லை?

Sinopharm  ஒரு வெற்றிகரமான தடுப்பூசியா?

--- Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் ---

1. Sinopharm  தடுப்பூசியினால் கோவிட் நோய்  ஏற்பட முடியுமா?

 Sinopharm தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது. இதனால், அது எந்த வகையிலும் உடலில் செயல்படவோ, பெருக்கமடையவோ முடியாது. எனவே, நோயை உண்டாக்கல்  சாத்தியமில்லை.

2. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏன் Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை?

 இதற்கான காரணம்,  கர்ப்பிணி தாய்மார்களிடையே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் இதுவரை போதுமான அளவில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசியின் தன்மை மற்றும் கூறுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியின்  செயல்திறனும் பாதுகாப்பும் கர்ப்பிணித் தாய்மார்களிடையேயும்  மாற்றமின்றியே காணப்படும் என நம்புகிறது.
எதிர்காலத்தில் இத்தடுப்பூசி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதா?, எச்சந்தர்ப்பத்தில் வழங்குவது? போன்ற முடிவுகள் தடுப்பூசி தொடர்பாக நிகழ்கால புதிய தரவுகளுக்கு ஏற்ப தொற்று நோய் விஞ்ஞான ஆய்வகத்தால் தீர்மானம் மேற் கொள்ளப்படும்.  

 3. எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது  சிக்கல்களை ஏற்படுத்துமா?

தடுப்பூசியைப் பெற  முன் கர்ப்பத்தை பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தினை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யவில்லை.  இத்தடுப்பூசி எந்த வகையிலும் ஒருவரில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. எனவே, எதிர்காலத்தில் தாய்மையை  எதிர்பார்க்கும் ஒருவர் இந்த தடுப்பூசிப் பெற்றுக் கொள்ள  எந்த தடையும் இல்லை. கர்ப்ப காலத்தில் கோவிட் நோய், உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, முன்பே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது புத்திசாலித்தமாகத்  தெரிகின்றது.

4. தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா?

இந்த தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் எந்தவொரு

Sunday, June 6, 2021


முல்லைத்தீவில் கொரோனா பரவலிற்கு காரணமான புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறக்க விடாமல் தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக சென்று, பணியாளர்களை தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் உபதவிசாளர ஜனமேஜெயந்த் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


Thursday, May 20, 2021

 கிளிநொச்சி - அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் முன்பாக 3 சிறுவர்களுடன் தந்தை ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளார்.Blog Left Sidebar - Real Tamil News


குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 24 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அவர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும், கணவனுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கராயன் மணியங்குளம் பகுதியை சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு

நூற்றாண்டில்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு

தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துதே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களிற்கு முன்னரே தற்போது உள்ள சூழலில் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என தாம் மறித்த நிலையில், தொழிற்சாலை ஊழியர்களால் நம்பிக்கையூட்டப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டதாகவும் கணவர் தெரிவிக்கின்றார்.

குறித்த குடும்பத்தாருடன் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட எடுத்த முயற்சி நீண்ட நேரத்தின் பின்னர் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடலின் பின் முடிவுக்கு வந்தது.

குறித்த பெண் குணமடைந்து திரும்பும்வரை அக்குடும்பத்திற்கான உதவிகளை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்திருந்தது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பலதரப்பட்ட தரப்புக்களாலும்

கோரிக்கைகள் பரவலாக விடுக்கப்பட்டுவந்துள்ள சூழலிலும் இன்றுவரையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான சூழலில் பல குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றமை குறித்து இனியாவது உரிய தரப்புக்கள் செவி சாய்க்குமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்

Tuesday, May 18, 2021

 

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பிள் மரம் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் .

தாம் நாட்டிய மரத்தின் ஊடாக தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூருவது மட்டும் அல்லாது வேற்றின மக்களுக்கும் தமிழின அழிப்பு சார்ந்த செய்தியை கடத்தி வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப் பூங்காவுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும்” . என்ற வாசகம் யேர்மன் மொழியில் பலகையில் பொறிக்கப்பட்டு மரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.



வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்‌ பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர்‌ பிரிவின்‌ கோடாலிபறிச்சான்‌ காட்டுப்பகுதியில்‌ விகாரையுடன்‌ தொடர்புடைய இடிபாடுகள்‌ உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள்‌ திணைக்‌௧ள அதிகாரிகளால்‌ அண்மையில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன நினைவுச்சின்னம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களா இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வவுனியா வடக்கில் உள்ள நைனாமடு கிராமத்தில் 23 சி கிராம அலுவலகர் பிரிவில் காட்டுப்பகுதியில் இந்த புரதான நினைவுச்சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. காட்டுப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் தொடர்பில் வவுனியா நெடுங்கேணி வீதியில் உள்ள 17 வது விஜயபாகு படையணி தளபதியால் வவுனியா தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவித்த தகவலுக்கு அமைய குறித்த பகுதி தொல்பொருள்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நைனாமடு சந்தியில் இருந்து சின்னடம்பன் ஊடாக நைனாமடு காட்டிற்கு 9.5 கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டும்

8 கற்தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அந்த பகதியில் பழைய கட்டிடங்களின் கல், ஓடுகள் 100 மீற்றர் வரையான சுற்றப்பகுதிகளில் காணப்படுவதாகவும் புதையல் தோண்டும் நபர்களால் முக்கிய பகுதி சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அங்கு காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் கி.மு.4, 8 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் காணப்படுகிறது.

வவுனியா மாவட்ட தொல்பொருள்‌ திணைக்கள அதிகாரிகளால்‌ குறித்த பகுதி அண்மையில்‌ ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. எனினும்‌ இது தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலருக்கும் எந்தத்‌ தகவலும்‌ தெரியப்‌படுத்தப்படவில்லை.

அந்தப் பகுதியை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனர் நிர்மான பணிகள் மேற்கொள்ளவுள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குருந்தனூர் மலை விவகாரம் தீராத சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கு அண்மித்த பகுதியில் புதிய விவகாரத்தை தொல்பொருள்


இலங்கையின் பூர்வ குடிகள் யார் ? வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம்

வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்...