இஸ்ரேலுக்கு ரூ.5,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!!!!
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நடைபெற்று
வரும் மோதல் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல்
இராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸ் ஏவுகணைகளை அனுப்பியது.
இதனைத்
தொடர்ந்து காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ஏவுகணைகளைக் கொண்டு
தாக்கத் தொடங்கியது.
இந்தத்
தாக்குதல்களில் தற்போது வரை 190க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்
50க்கும்
அதிகமானவர்கள் குழந்தைகள்.
இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை
முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இரு தரப்பும்
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியது.
ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு
ஆதரவாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காசாவின் போர் நிறுத்தம்
கொண்டு வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அமெரிக்க மூன்றாவது தடுத்து
நிறுத்தியுள்ளது.
அமெரிக்க
அதிக அளவில் இராணுவ உதவி செய்து வரும் நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் முதலிடத்தில்
உள்ளது. அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக்கு அமெரிக்காவிற்குள்ளும் ஆளும் குடியரசு
கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்ரேலுக்கு
அமெரிக்கா செய்து வரும் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் குரல்
எழுந்துள்ளது. ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் இந்தக் கோரிக்கைகளைப் பொருட்படுத்தவில்லை.
இந்த
நிலையில் தற்போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ரூ.5,500 கோடி மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை விற்க அனுமதி
வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment