Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா❓❓❓Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் ---
🚨#Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா❓❓❓
👉👉எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவருக்கு தடுப்பூசிப் பெற்றுக்கொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்துமா?
தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா?
ஏன் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை?
Sinopharm ஒரு வெற்றிகரமான தடுப்பூசியா?
--- Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் ---
1. Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா?
Sinopharm தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது. இதனால், அது எந்த வகையிலும் உடலில் செயல்படவோ, பெருக்கமடையவோ முடியாது. எனவே, நோயை உண்டாக்கல் சாத்தியமில்லை.
2. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏன் Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை?
இதற்கான காரணம், கர்ப்பிணி தாய்மார்களிடையே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் இதுவரை போதுமான அளவில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசியின் தன்மை மற்றும் கூறுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியின் செயல்திறனும் பாதுகாப்பும் கர்ப்பிணித் தாய்மார்களிடையேயும் மாற்றமின்றியே காணப்படும் என நம்புகிறது.
எதிர்காலத்தில் இத்தடுப்பூசி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதா?, எச்சந்தர்ப்பத்தில் வழங்குவது? போன்ற முடிவுகள் தடுப்பூசி தொடர்பாக நிகழ்கால புதிய தரவுகளுக்கு ஏற்ப தொற்று நோய் விஞ்ஞான ஆய்வகத்தால் தீர்மானம் மேற் கொள்ளப்படும்.
3. எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது சிக்கல்களை ஏற்படுத்துமா?
தடுப்பூசியைப் பெற முன் கர்ப்பத்தை பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தினை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யவில்லை. இத்தடுப்பூசி எந்த வகையிலும் ஒருவரில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. எனவே, எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் இந்த தடுப்பூசிப் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. கர்ப்ப காலத்தில் கோவிட் நோய், உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, முன்பே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது புத்திசாலித்தமாகத் தெரிகின்றது.
4. தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா?
இந்த தடுப்பூசி தொடர்பாக செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் எந்தவொரு