Breaking News
Loading...
Share It

Recent Posts

Recents

AD
AD
Powered by Blogger.
ads

Comments

recentcomments

Subscribe Us

Popular Posts

Random Posts

randomposts

Popular

Thursday, May 20, 2021

மனைவிக்கு கொரோனா தொற்று, பிள்ளைகளுடன் ஆடைத் தொழிற்சாலை வாசலில் கணவன் போராட்டம்..! தொடரும் ஆடைத் தொழிற்சாலை அவலம்!!!.
May 20, 2021 by

 கிளிநொச்சி - அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் முன்பாக 3 சிறுவர்களுடன் தந்தை ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளார்.Blog Left Sidebar - Real Tamil News


குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 24 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அவர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும், கணவனுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கராயன் மணியங்குளம் பகுதியை சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு

நூற்றாண்டில்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு

தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துதே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களிற்கு முன்னரே தற்போது உள்ள சூழலில் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என தாம் மறித்த நிலையில், தொழிற்சாலை ஊழியர்களால் நம்பிக்கையூட்டப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டதாகவும் கணவர் தெரிவிக்கின்றார்.

குறித்த குடும்பத்தாருடன் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட எடுத்த முயற்சி நீண்ட நேரத்தின் பின்னர் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடலின் பின் முடிவுக்கு வந்தது.

குறித்த பெண் குணமடைந்து திரும்பும்வரை அக்குடும்பத்திற்கான உதவிகளை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்திருந்தது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பலதரப்பட்ட தரப்புக்களாலும்

கோரிக்கைகள் பரவலாக விடுக்கப்பட்டுவந்துள்ள சூழலிலும் இன்றுவரையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான சூழலில் பல குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றமை குறித்து இனியாவது உரிய தரப்புக்கள் செவி சாய்க்குமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்

Tuesday, May 18, 2021

ஜேர்மனியில் அப்பிள் மரத்திற்கு அஞ்சலி செலுத்திய தமிழர்கள்: காரணம் இதுதான்!!!!
May 18, 2021 by

 

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பிள் மரம் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் .

தாம் நாட்டிய மரத்தின் ஊடாக தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூருவது மட்டும் அல்லாது வேற்றின மக்களுக்கும் தமிழின அழிப்பு சார்ந்த செய்தியை கடத்தி வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப் பூங்காவுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும்” . என்ற வாசகம் யேர்மன் மொழியில் பலகையில் பொறிக்கப்பட்டு மரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.



வவுனியா வடக்கில் இன்னொரு பௌத்த அடையாளமாம்; தொல்பொருள் திணைக்களம் ‘ஆரம்பிக்கிறது’!!!!
May 18, 2021 by

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்‌ பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர்‌ பிரிவின்‌ கோடாலிபறிச்சான்‌ காட்டுப்பகுதியில்‌ விகாரையுடன்‌ தொடர்புடைய இடிபாடுகள்‌ உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள்‌ திணைக்‌௧ள அதிகாரிகளால்‌ அண்மையில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன நினைவுச்சின்னம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களா இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வவுனியா வடக்கில் உள்ள நைனாமடு கிராமத்தில் 23 சி கிராம அலுவலகர் பிரிவில் காட்டுப்பகுதியில் இந்த புரதான நினைவுச்சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. காட்டுப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் தொடர்பில் வவுனியா நெடுங்கேணி வீதியில் உள்ள 17 வது விஜயபாகு படையணி தளபதியால் வவுனியா தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவித்த தகவலுக்கு அமைய குறித்த பகுதி தொல்பொருள்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நைனாமடு சந்தியில் இருந்து சின்னடம்பன் ஊடாக நைனாமடு காட்டிற்கு 9.5 கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டும்

8 கற்தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அந்த பகதியில் பழைய கட்டிடங்களின் கல், ஓடுகள் 100 மீற்றர் வரையான சுற்றப்பகுதிகளில் காணப்படுவதாகவும் புதையல் தோண்டும் நபர்களால் முக்கிய பகுதி சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அங்கு காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் கி.மு.4, 8 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் காணப்படுகிறது.

வவுனியா மாவட்ட தொல்பொருள்‌ திணைக்கள அதிகாரிகளால்‌ குறித்த பகுதி அண்மையில்‌ ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. எனினும்‌ இது தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலருக்கும் எந்தத்‌ தகவலும்‌ தெரியப்‌படுத்தப்படவில்லை.

அந்தப் பகுதியை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனர் நிர்மான பணிகள் மேற்கொள்ளவுள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குருந்தனூர் மலை விவகாரம் தீராத சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கு அண்மித்த பகுதியில் புதிய விவகாரத்தை தொல்பொருள்


ஆடைத் தொழிற்சாலை பாதிப்புக்களிற்கு அரச அதிபர்களும், சுகாதார துறையிருமே பொறுப்பு கூற வேண்டும்!!!
May 18, 2021 by

 

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்பட்ட தொற்றுக்கு பெருந்தொகை நட்ட ஈட்டினை அந்த தொழிற்சாலை வழங்க வேண்டும் எனவும், இவ்வாறான பாதிப்பினால் ஏற்படும் இழப்புக்களிற்கு மாவட்ட அரசாங்க அதிபர்களும், சுகாதார ஊழியர்களுமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் சார்பில் ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது பொது அமைப்புக்கள் சார்பில் கருத்து தெரிவித்த கரைச்சி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர் கருப்பையா ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய முடிவுகளின் படி புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 310 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்வாறு குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணும்வரை அந்த நிர்வாகம் சரியாக கையாளவில்லை. அவர்களிற்கான பி சி ஆர் உள்ளிட்ட விடயங்களை சரியான முறையில் கையாண்டிருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தொற்றாளர்கள் அடையாளம் கண்டிருக்கமாட்டார்கள்.

குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கு காரணம் அந்த நிர்வாகமேயாகும். பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிற்கு குறித்த ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் பெருந்தொகையான நட்ட ஈட்டினை வழங்க வேண்டும். கம்பகாவில் தொற்று ஏற்படும்போது கண்டு கொள்ளவில்லை. புதுக்குடியிருப்பில் தொற்று அதிகரித்துள்ள போதிலும் ஏனைய நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலைமை மோசமாகி உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படுமாக இருந்தால் மாவட்டத்தில் ஏற்படும் இழப்பிற்கு மாவட்ட அரசாங்க அதிபர்களும், சுகாதார தரப்பினரும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்தை தாண்டும் அளவிற்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். இது பாதகமான நிலையை மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை மிக முக்கியமாக இருக்கின்றது.

மக்கள் அவ்வாறு பாதுகாப்பான முறையில் நடந்துகொண்டு இருக்கின்ற போதும், வடமாகாணத்தில் இதற்கு மாறான சில நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 310க்கு மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையை பார்க்கின்றபோது வடமாகாணம் பாரிய அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பது போன்றதான அச்ச நிலை தோன்றுகின்றது. ஏற்கனவே நாங்கள் எமது இனத்தின் ஒரு பகுதியை இழந்து நிற்கின்றோம். இந்த நிலையில் கொவிட் தொற்று பரவலினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டால் கணிசமான தமிழர்கள் இல்லாது போகும் நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் சுமார் 2000த்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். எமக்கு இருக்கின்ற சமூக பொறுப்பு வாய்ந்த பார்வையின் ஊடாக பார்க்கின்றபோது இங்கிருக்கின்ற ஆடைத்தொழிற்சாலைகள் இரண்டிரும், புதுக்குடியிருப்பில் இருக்கின்ற ஆடைத்தொழிற்சாலை போன்று தொற்று பரவுமானால் கிளிநொச்சி கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

ஆகவே இதனை சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மாவட்டத்தின் அக்கறையுள்ள குடிமகன் என்ற வைகயில், நாங்கள் இந்த விடயங்களை ஊடகங்கள் வழியாக சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.

அவ்வாறான ஆபத்தான நிலையை தடுப்பதற்கு இங்குள்ள சுகாதார துறையினருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முக்கியமான பொறுப்பாக இருக்கின்றது. அண்மையில் மூன்று நாட்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்திலும் குறித்த ஆடைத்தொழிற்சாலை இயங்கியதாகவே அறியக்கிடைக்கின்றது.

உண்மையில் தொற்று பரவாமல் இருப்பதற்காகவே பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததே தவிர, வேறு காரணங்களிற்காக அல்ல. குறித்த பயண கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பதற்கு குறித்த ஆடைத்தொழிற்சாலைகளிற் நிர்வாகம் பணியாளர்களிற்கு அனுமதிக்கவில்லை.

அப்போதைய சூழலிலும், இன்றும் அவர்கள் வேலைக்கு சென்றிருக்கின்றார்கள். குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் அபாயகரமான தொற்று உருவாகுமாக இருந்தால் அது எமது மாவட்டத்தையே அழித்துவிடும்.

தொற்று வருமுன்னே எமது மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும் அல்லது சொற்பமாக வந்ததை அடியோடு அழிக்க வேண்டுமென்றால் உடனடியாக கிளிநொச்சியில் இருக்கின்ற இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். அதேவேளை நீண்ட காலமாக பணியாளர்களாக இருந்த அவர்களிற்கு சம்பளத்தடனான விடுமுறையை குறித்த ஆடைத்தொழிற்சாலைகள் அவர்களிற்கு வழங்க வேண்டும்.

அதேவைள அனைத்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கும் பி சி ஆர் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாவட்டத்தில் எவ்வாறான தொற்று நிலை காணப்படுகின்றது என்பது தொடர்பில் அறிய முடியும். அவ்வாறு இல்லாது அசமந்த போக்காக இருந்தால் மாவட்டத்திற்கு பாரிய அழிவு நிலை தோற்றம் பெறும். மாவட்டத்தில் தொற்று அபாய நிலை முழுமையாக நீங்கும்வரை குறித்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பது இன்றைய முக்கிய மான நிலைப்பாடாக உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மாவட்ட சுகாதார துறையினரும், அரசாங்க அதிபரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என அன்பாகவும், தயவாகவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். மாவட்டத்தில் பாதுகாப்பிற்கும், நோய் பரவலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் குறித்த ஆடைத்தொழிற்சாலை விடயம் முக்கிய இடம் பிடிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பும் கவனம் செலுத்த வே்ணடும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சியையும் கிலிகொள்ள வைக்கும் கொரோனா: ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 48 பேருக்கு தொற்று!!!!
May 18, 2021 by

 

ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 48 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் பெருமளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய, கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 41 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சியிலுள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மேலும் 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

புதுக்குடியிருப்பில் கத்திக்குத்திற்கு இலக்காகி இளைஞன் பலி!!!
May 18, 2021 by



முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட  சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளஞ்ஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படட நிலையில் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட  நீதிபதி ரி.சரவணராஜா இன்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் பார்வையிட்ட பின்னர் குறித்த நபருக்கு  பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு  பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பி சி ஆர் பரிசோதனைகளில்  கொரோனா தொற்று இல்லையெனில் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம்ஒப்படைக்கப்படும் தொற்று இனம்காணப்பட்டால் உரிய கொரோனா நடைமுறைக்கமைய தகனம் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சுதந்திரபுரம் கொலனி   பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன் என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும்  புதுக்குடியிருப்பு பொலிசார் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ரூ.5,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!!!!
May 18, 2021 by

 

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நடைபெற்று வரும் மோதல் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸ் ஏவுகணைகளை அனுப்பியது. 

இதனைத் தொடர்ந்து காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கியது. 

இந்தத் தாக்குதல்களில் தற்போது வரை 190க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 50க்கும் அதிகமானவர்கள் குழந்தைகள்.

இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியது.

ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காசாவின் போர் நிறுத்தம் கொண்டு வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அமெரிக்க மூன்றாவது தடுத்து நிறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிக அளவில் இராணுவ உதவி செய்து வரும் நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக்கு அமெரிக்காவிற்குள்ளும் ஆளும் குடியரசு கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்து வரும் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது. ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் இந்தக் கோரிக்கைகளைப் பொருட்படுத்தவில்லை. 

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ரூ.5,500 கோடி மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை விற்க அனுமதி வழங்கியுள்ளது.

இளவரசர் ஹரி-மேகன் ஜோடிக்கு எப்போது எங்கு திருமணம் நடந்தது? உண்மையை உடைத்த பேராயர்
May 18, 2021 by

 


இளவரசர் ஹரி-மேகன் ஜோடி சட்டப்பூர்வமாக 2018 மே 19 அன்று விண்ட்சர் மாளிகையில் திருமணம் செய்துக்கொண்டதாக கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி தெளிவுப்படத்தியுள்ளார்.

 ஓப்ரா உடனான பேட்டியில், எங்கள் திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம் எனக் கூறி மேகன் பரபரப்பை கிளப்பினார்.

இது யாருக்கும் தெரியாது, ஆனால் நாங்கள் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி மட்டும் அழைத்தோம்.

எங்கள் அறையில் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி முன்னாள் நாங்கள் சபதங்களை பரிமாறிக்கொண்டோம் என மேகன் கூறினார்.

ஐரோப்பிய செய்தித்தாள் ஒன்றுடனான நேர்காணலில் மேகனின் கருத்துக்கள் குறித்து தௌவுப்படுத்திய கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி, 2018 மே-19 இளவரசர் ஹரி-மேகனின் அதிகாரப்பூர்வமான திருமண நாளுக்கு முன் தம்பதிகளை நான் பல முறை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளேன்.

2018 மே 19 அன்று விண்ட்சர் மாளிகையில் தான் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திருமணம் நடந்தது. நான் வேறு நாளில் திருமண சான்றிதழில் கையெழுத்திட்டிருந்தால், நான் கடுமையான குற்றத்தைச் செய்திருப்பேன்.

திருமணம் மே 19 அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் எங்கள் மற்ற சந்திப்புகளில் என்ன நடந்தது என்று நான் கூறமாட்டேன் என பேராயர் ஜஸ்டின் வெல்வி கூறியுள்ளார்.  



Monday, May 17, 2021

முள்ளிவாய்க்காலை உள்ளடக்கிய முல்லைத்தீவின் 3 பொலிஸ் பிரிவுகள் லொக் டவுன்!!!!!!
May 17, 2021 by

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இன்று இரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் வரை இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தர்மபுரம் சோதனைச்சாவடியில் அமைதியின்மை!!!!
May 17, 2021 by

 


கிளிநொச்சி மாவட்டத்தின் நெத்தலியாறு சோதனைச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறி, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், முடக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள மக்கள் அவசர தேவைகள் கருதியும் வெளியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. கர்ப்பிணிகள், புற்றுநோயாளர்கள், சத்திரசிகிச்சைக்கு செல்பவர்கள் என பலர் வந்து, தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த இடத்தில் இருந்த இந்த நிலையில் தர்மபுரம்நெத்தலியாறு பகுதியில் இராணுவத்தினர் இன்று வீதித்தடை அமைத்துபோக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் தர்மலிங்கம் சிவா நிலைமையை நேரலையாக பதிவிட்டார்

அதில், கர்ப்பிணி பெண்ணொருவர் தன்னை தொடர்ந்து பயணிக்க முடியாதென வழிமறித்த இராணுவம், வீதியிலேயே குழந்தை பிரசவிக்குமாறு தெரிவித்ததாக கூறினார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று கழுத்து பகுதியில் சத்திரசிகிச்சை நடைபெறவுள்ள பெண்ணொருவர், தெல்லிப்பளைக்கு சிகிச்சைக்கு வர வேண்டிய புற்றுநோயாளர் என பலர் வழிமறிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது

நீண்ட இழுபறியின் பின்னர்- பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் பின்னர்- வைத்திய தேவைக்காக செல்பவர்கள் மட்டும், சோதனைச்சாவடியை கடக்க அனுமதிக்கப்பட்டனர்

நேற்று 384 பேருக்கு தொற்று!!!
May 17, 2021 by




இலங்கையில் நேற்று 384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,610 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 345 நபர்கள், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 33 பேர் மற்றும் சிறைகளில் இருந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 399 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,836 ஆக உயர்ந்தது.

தற்போது, 3,285 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று சந்தேகத்தில் 474 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!!!
May 17, 2021 by

 நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை





தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


வெசாக் பண்டிகை முடியும் வரை பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொதுமக்களின் ஆதரவு கோவிட் பரவல் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக்கொள்ள உதவியாக அமையும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்து ஒத்துழைத்ததைப் போன்று, அடுத்த 10 நாட்களும் பயணங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பூர்வ குடிகள் யார் ? வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம்

வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்...